Tamilnadu
பா.ஜ.க கும்பலுக்கு கொள்கை ரீதியான பதிலடி.. சமூக நீதி தடியைக் கையில் எடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“இந்தியா டுடே’’ இந்தி பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியரும் ஊடகம் மற்றும் சமூகவியலில் நூல்களை எழுதியிருப்பவருமான பத்திரிகையாளர் திலீப் மண்டல் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதிய கட்டுரை நீரா மஜூம்தாரால் தணிக்கை செய்யப்பட்டு, “கோவில்களுக்குள் “நீட்’’, ஸ்டாலினின் தமிழ்நாடு ஒரு புதிய சமூகநீதி வாய்பாட்டை உருவாக்கியுள்ளது.
மண்டல் பிளஸ் மார்க்கெட் என்ற தலைப்பிலும், வடநாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்க்கட்சிக்கான வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் உணர்ந்திருக்கக்கூடும் அதன் அரசியல் இந்து - முஸ்லிம் இரட்டை நட்சத்திர மோதலாகக் குறைக்கப்பட்டுவிட்டது. தி.மு.க. தலைவர் சமூக நீதி தடியைக் கையில் எடுத்துள்ளார்’’ என்ற துணைத் தலைப்பிலும், வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொள்கை ரீதியான பதிலடி தர முயற்சி!
வட இந்திய மண்டல் மாநிலங்கள் “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் புதிய அரசியலாலும் இந்துத்வா மாநிலங்களாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் நாட்டின் சமூக நீதித் தடி மறுபடியும் தமிழ்நாட்டால் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டுகளின் சமூக நீதிப்போராளிகளுக்கு தற்போது வயதாகி விட்டதால் புதிய யுகத்தில் தங்களை மறு விளக்கம் செய்துகொள்ள முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு, அதிகரிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் “நீட்’’ மற்றும் இட ஒதுக்கீடு வாதத்தை அரசியலிலும் நீதிமன்றங்களிலும் மறுவடிவம் செய்துள்ளது. 21வது நூற்றாண்டின் திருப்பம் என்னவென்றால் அவர் ஒரு புதிய வாய்பாட்டை முயற்சித்திருக்கிறார் - மண்டல் பிளஸ் மார்க்கெட் முந்தைய யுகத் தலைவர்கள் மண்டல் பிளஸ் சோசலிசம் என்று போதித் தார்கள்.
இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இது அரசியலுக்கும் சமூகநீதி அரசியல்வாதிகளுக்கும் யுத்தம் நடக்கும் கடுமையான நேரம். அரசியல் விஞ்ஞானி கிறிஸ்டோபர் ஜஃப்ரலாட், சரியாகக் குறிப்பிட்டதுபோல “மவுனப் புரட்சி’’ தற்போது முடிவடைந்துவிட்டது. இது மாபெரும் பின்புறப் பயணத்துக்கான நேரம் ஏனெனில், “மவுனப் புரட்சி ஒரு எதிர்ப் புரட்சியைச் கொண்டு வந்தது அது உயர்குடிமக்களின் பழிவாங்கல் அதன் முன்னணிப் படையாக பா.ஜ.க. உள்ளது. தேசிய கட்சியில் குறிப்பாக 2014க்கு பிறகு பாரம்பரிய சமூகநீதி அரசியல் தனது பிரகாசத்தை இழந்துவிட்டது.
ஆனால் எல்லாம் இழக்கப்படவில்லை. இன்னமும் அங்கே ஒரு கோட்டை உள்ளது. அது இந்துத்வா விளக்கத்திற்கு கொள்கை ரீதியான பதிலடி கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் வித்தியாசமான வகையான கோயில் அரசியலையும் செய்து வருகிறது. இந்தச் சவால் திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாலும் அளிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற வெற்றிகளை மாறாமல் வைத்துக் கொண்டு தி.மு.க.வின் அரசியல் விளக்கங்கள் சமூக நீதி, நலத்திட்டங்கள், பகுத்தறிவுடன் வளர்ச்சி பற்றிய அரசியல் விளக்கமாக உள்ளது.
ஒரு முக்கியமான வளர்ச்சியாக குடியரசு நாளில் தான் விரைவில் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பை தொடங்கப் போவதாகவும் அதன் மூலம் கூட்டாட்சி மற்றும் சமூக நீதியின் கொள்கைகளை தேசிய அளவில் சாதிப்பதற்கு உழைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். அதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் தலைவர்கள் இடம் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் தனது தேசிய ஆசையை முதன் முறையாக மு.க.ஸ்டாலின் காண்பித்துள்ளார். இது தமிழ்நாட்டுக்கு புதிது அல்ல. ஏற்கனவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வலுவான அடித் தடங்களைப் பதித்துள்ளார். மு.க.ஸ்டாலின் ஒரு வேளை அங்கே எதிர்கட்சிக்கான இடத்தில் கொள்கை ரீதியான வெற்றிடம் உள்ளது என்பதை உணர்ந்திருக்கலாம். எதிர்க்கட்சிகள் இந்துத்வாச் சூழலில் சிக்க வைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. வெற்றிகரமாக, தேசிய அரசியலை இந்து-முஸ்லிம், மதச்சார்பின்மை - வகுப்புவாதம் என்ற இரட்டை நிலை மோதலுக்குச் சுருக்கிவிட்டது.
இந்தச் சூழலுக்குள் எதிர்க் கட்சிகளும் இழுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் இன்னமும் காட்டுக்குள் தன்மை மீட்பவரைத் தேடிச் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனோபாவம் பா.ஜ.க.வுக்கு கருமையாக ஏற்படுவதற்கும் காத்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் காங்கிரஸ், பெருமளவில் ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே களம் அமைத்துக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் அதே மதச் சார்பின்மை வகுப்புவாத அட்டையை, மாநில வங்காளப் பெருமையுடன் பயன்படுத்திவருகிறார்” இவ்வாறு திலீப் மண்டல் 28.01.2022 அன்று எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!