Tamilnadu
NeoCoV வைரஸ் தொற்றால் தமிழ்நாட்டிற்கு ஆபத்தா? : சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது என்ன?
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொற்று கடந்த 2 ஆண்டு காலமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிதாக NeoCoV என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இது வ்வாலிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதர்களிடம் பரவும் தன்மை உள்ளதாகச் சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த வைரஸ் பரவினால் மூன்று பேரில் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன. இதனால் இந்த புதிய தொற்று குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் NeoCoV தொற்று குறித்து தேவையற்ற கருத்துக்களைப் பரப்ப வேண்டாம் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன்,"தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். புதிய NeoCoV வைரஸ் வ்வாலிடம் இருந்து வ்வாலுக்கு பரவக்கூடியது. இதனால் இந்த தொற்று குறித்து தேவையற்ற கருத்துக்களைப் பரப்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?