Tamilnadu
“உத்தரப்பிரதேச இந்துத்வா அரசியலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடலும்” : சிறப்பு கட்டுரை!
உத்தரப்பிரதேசத்தில் நிலவி விரும் இந்துத்துவ அரசியல் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பற்றி விவரிக்கும் இந்து நாளேட்டின் கட்டுரையாளர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்ட `திராவிட மாடல்’ என்னும் சமூக சீர்திருத்தம் மூலம் பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் பற்றியும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் `திராவிட மாடல்’ பற்றி கருத்து வெளியிட்டிருந்தார். அதாவது, சமூக சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை வெற்றிகரமாக ஏற்படுத்த முடியும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய திறமை மிக்க கண்ணோட்டம், ‘இந்துத்துவா’ அரசியலில் திளைக்கும் உத்தரப்பிரதேசத்துக்குப் பொருந்தாது என்று ‘தி இந்து’ நாளேட்டில் நேற்று (27.1.2022) வெளியான நடுப்பக்கக் கட்டுரையில் புதுடெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சீமா சிஸ்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற இருக்கும் தேர்தல்கள் பற்றி, ‘‘THE SUBSTANCE OF THE U.P. ELECTIONS’ - என்ற தலைப்பில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்துத்துவா அரசியலுக்கு ஒரு சவாலான நிலைமை அங்கு உருவாகி வருவதாகவும் அந்தக் கட்டுரையில் அவர் விவரித்துள்ளார்.
அக்கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:-
சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஓம் பிரகாஷ் ராஜ்பார் ஒரு கட்டத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் முக்கிய அங்கமாகத் திகழ்ந்திருந்தார். அதேசமயம் உத்தரப்பிரதேசத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பியவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அடிமைத் தனத்திலிருந்து வெளியேறி சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவோம் என்பது அவரது முழக்கமாக இருந்தது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்மதுரை வடக்கு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த செயல்வீரர்கள் கூட்டம்!
மாவட்டச் செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை! அமைச்சரவையில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் மற்ற ஓ.பி.சி. தலைவர்களோடு சேர்ந்து ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்கள் கடிதத்தில் பிற்படுத்தப்பட்டவர்களை ஒதுக்குதல், தலித்துகள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்களை ஒதுக்குதல் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டுள்ளனர்.
வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் பற்றித்தான் அதிகம் பேசப் படக் கூடியதாக இருக்கும். அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள போக்குகளைப் பார்க்கும் போது இந்துத்துவா பார்வை இருப்பதையே காட்டுகிறது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் கிடைத்தாலும் இந்துக் கொடையின் கீழ்தான் அது முடிவெடுக்கக் கூடியதாகவே இருக்கும். `மண்டல்’ அமலுக்கு வந்த பிறகு ஒரு தலைமுறையே சென்று விட்டது. இப்போது ஓ.பி.சி. இளைஞர்கள் அதன் பலன்களை அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். அது நீடிக்கவும் வாய்ப்புள்ளது. 2010களில் பொரு ளாதார வீழ்ச்சி பல்வேறு கனவுகளை தகர்க்கச் செய்தது. அதேசமயம் குறிப்பிடத்தக்க பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பிரதமர் நரேந்திரமோடி கதாநாயகராக விளங்கினார். 2014 தேர்தல்களில் ஓ.பி.சி. பிரிவினர் முக்கியப் பங்கு வகித்தனர். மொத்த வாக்காளர்களில் 25 சதவிகிதம் பேர் உள்ள 18 முதல் 25 வயதுக்குள்ளானவர்கள் 68 சதவிகிதம் அளவிற்கு எதிர்பாராத வகையில் வாக்களித்திருந்தனர். இது தேசிய சராசரியைவிட மிகவும் அதிகம்.
அவர்களில் 34.4 சதவிகிதம் பேர் மோடியின் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளனர். கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவைவிட இது 3 சதவிகிதம் அதிகம். அதன் மூலம் அவர்கள், ‘சமூக நீதி’ யின் மூலம் பெற்ற பலன்களை விட்டுவிட இசைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. மோடியாகட்டும், ஆதித்யநாத் ஆகட்டும், கமண்டலத்தை நோக்கியே ஒவ்வொருவரையும் கொண்டு செல்ல முற் பட்டனர்.
சரித்திர ரீதியாக, உத்தரப்பிரதேச பொருளாதாரமானது சுரண்டல்காரர்களின் மையமாகவும், சீர்த்திருத்தமற்ற ஜமீந்தாரி முறையிலுமாகவும் இருந்து வந்துள்ளது. நில உரிமை, பொருளாதார வலிமை மற்றும் சமூக நிலை இவைகளின் இடைவெளி காரணமாக அங்கு சமூக சீர்திருத்தம் என்பது வாய்ப்பில்லாமல் உள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், அத்தகைய நிலைமை இல்லை. முறையே ஸ்ரீ நாராயண குரு, பெரியார், ஜோதிபா பூலே உள்ளிட்ட தலைவர்கள் அங்கு இருந்ததே காரணம். சமூக சீர்திருத்தம் மூலம் பொருளாதார உயர்வை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியும் என்பதே `திராவிட மாடல்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் குறிப்பிட்டதைப்போல், உத்தரப்பிரதேசத்தில் ஏற்படவாய்ப்பில்லை.
இவ்வாறு அந்தக் கட்டுரையின் ஒருபகுதியில் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நிலவி வரும்’ ‘இந்துத்துவா’ மூலம் பொருளாதார வளர்ச்சி முறைகள் பற்றி மேலும் பலவாறாக விரிவாக விளக்கும் அந்தக்கட்டுரையின் நடுவில், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக சீர்திருத்தம் மூலம் பொருளாதார வளர்ச்சி என்னும் திராவிட மாடல் குறித்தும் அச்சாரமாகக் குறிப்பிட்டுள்ளார் சீமா சிஸ்டி.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?