Tamilnadu
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு : தமிழர்களின் கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட ‘ரிசர்வ் வங்கி’ !
நாடு முழுவதும் 73வது குடியரசு தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அதன் ஒருபகுதியாகசென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசால் மாநில பாடல் என அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள்.
இதனை செய்தியாளர்கள் ஏன் எழுந்து நிற்கவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது” என ஆர்.பி.ஐ. ஊழியர்கள் வாதிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தி.மு.க எம்.பி கனிமொழி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது எழுந்து நிற்க மறுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையரிடம் வழக்கறிஞர் G. ராஜேஷ் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ரிசர்வ் வங்கி சார்பில் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி வருத்தம் தெரிவித்தார்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!