Tamilnadu
இனிமேல் இந்த 5 மோட்டல்களில் பேருந்து நிற்க தடை : மோசமான உணவு காரணமாக அதிரடி முடிவு எடுத்த தமிழ்நாடு அரசு!
மாமண்டூர் பேருந்து பயண வழி உணவகத்தில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சுகாதாரமின்றி தரமற்ற உணவுகள் விற்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அரசுப் பேருந்துகள் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மாமண்டூர் உணவகத்தைத் தொடர்ந்து மேலும் ஐந்து உணவகங்களில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விக்கிவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த உணவகங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!