Tamilnadu

காது குடைந்ததால் வந்த வினை.. சிறுமி காதில் மாட்டிக்கொண்ட சுருள் கம்பியை அகற்றிய அரசு மருத்துவர்!

சென்னை அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்த சிறுமி தேஷிதா. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த சுருள் கம்பியை எடுத்து தனது இடது காதில் விட்டுள்ளார். இதனால் காதில் கம்பி மாட்டிக் கொண்டு வலி எடுத்துள்ளது. இதைப்பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சிறுமியை அருகே இருந்த கிளினிக்கிற்கு கூட்டிச் சென்றனர். அங்கு சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டைப் பிரிவின் துணைப் பேரசாரியாக இருக்கும் மருத்துவர் நரேந்திரகுமார் சிறுமிக்குச் சிகிச்சை அளித்தார்.

எந்தவிதமான அறுவை சிகிச்சையும் இல்லாமல் காதில் மாட்டிக் கொண்டிருந்த கம்பியை அகற்றினார். தற்போது சிறுமி நலமுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "காது குடையும் பழக்கம் பலரிடம் உள்ளது.

இப்படிதான் சிறுமியும் காது குடையும் போது கம்பி காதில் மாட்டிக் கொண்டது. அதை அறுவை சிகிச்சை இல்லாமல் கம்பியைத் திருகித் திருகி வெளியே எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுமி நலமுடன் உள்ளார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “பாக்கெட்ல 10 ரூபா இருக்கா? கார் வாங்க வந்தாராம்” : கிண்டல் செய்த சேல்ஸ்மேன்.. ஷோரூமை மிரளவைத்த விவசாயி!