Tamilnadu

தமிழுக்கு கலைஞர் ஆட்சி என்ன செய்தது என்று கேட்கும் அறிவிலிகளுக்கான பதில் இதோ..!

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றும்போது, தி.மு.க ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகளைப் பட்டியலிட்டார்.

* நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது கலைஞர் ஆட்சி!

* 'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என ஆக்கியது!

* ஶ்ரீ,ஶ்ரீமதி என்ற சொல்லுக்கு பதிலாக திரு, திருமதி என்ற சொல்லை சட்டபூர்வம் ஆக்கியது!

* தலைநகரில் வள்ளுவர் கோட்டமும் கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது!

* திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது!

* தமிழ் வாழ்க என எழுத வைத்தது!

* சிலம்பின் பெருமையைக் காட்டும் பூம்புகார் கோட்டம் அமைத்தது!

* தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது!

* ஆட்சிமொழியாய் தமிழை முழுமைப்படுத்தியது!

* தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து 1000க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிட்டது!

* தமிழை கணினி மொழி ஆக்கியது!

* தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்று பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தமிழில் படிக்கலாம்!

* ஆசிரியர்களுக்கு இணையானவர்களாக தமிழாசிரியர்களை ஆக்கியது. தமிழாசிரியர்களும் தலைமையாசியர் ஆகலாம் என உயர்த்தியது!

* உலகம் முழுவதும் தமிழைப் பரப்பியது!

* உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது!

* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது!

* திராவிடப் பல்கலைக் கழகத்துக்கு நிதி வழங்கியது!

* தமிழறிஞர் நூல்களை எல்லாம் நாட்டுடமை ஆக்கியதும், அவர்களது குடும்பத்துக்கு இலட்சக்கணக்கில் நிதி உதவி செய்தது!

* தமிழ்நெட் இணைய மாநாட்டை 1999 இல் நடத்தியது!

* ஓலைச் சுவடி மொழியை அச்சு மொழியாகவும் ஆக்க அடித்தளம் அமைத்தது!

*செம்மொழி உயராய்வு நிறுவனத்தை அமைத்துத் தந்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.

அத்தகைய தமிழ் அரசை நடத்தியது தான் தி.மு.க அரசு!

அந்த வழியில் இன்றைய அரசும் தமிழரசாக நடந்து வருகிறது.

இவ்வாறு பட்டியலிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Also Read: “இவர்களால்தான் எழுந்துநிற்கிறது தி.மு.க எனும் மாபெரும் தமிழின இயக்கம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரைவீச்சு!