Tamilnadu
பூட்டை உடைத்து 4 லட்சத்தை தூக்கிய பலே கில்லாடி; செல்போன் வியாபாரி அதிர்ச்சி; மீட்டு கொடுத்த சென்னை போலிஸ்
சென்னை சிந்தாதிரிபேட்டையில் செல்போன் டிஸ்பிளே மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருபவர் ஜெகதீஷ் மாலி.
இவர் கடந்த 13ம் தேதியன்று கடையை பூட்டிவிட்டுச் சென்று மறுநாள் பொங்கலன்று கடைக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்திருக்கிறது.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 4 லட்சம் ரூபாய் காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் ஜெகதீஷ் மாலி புகாரளித்திருக்கிறார்.
அதன் மீது குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலிஸ் குழு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும், கடைக்கு அருகே இருந்தவர்களையும் விசாரணை மேற்கொண்டுள்ளது.
அதில், ரிச்சி தெருவைச் சேர்ந்த வினோத், நாகராஜ் என்ற பாம்பு நாகராஜ் ஆகிய இருவரும் தான் ஜெகதீஷின் கடையில் இருந்து பணத்தை திருடியது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலிஸார் அவர்களிடம் இருந்து 3.8 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான வினோத் மீது 3 கொலை முயற்சி வழக்குகள், 7 திருட்டு வழக்குகள் என 16 குற்ற வழக்குகளும், நாகராஜ் மீது 3 திருட்டு வழக்கு உட்பட 7 குற்ற வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விசாரணையை அடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிந்தாதிரிபேட்டை போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!