Tamilnadu

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க கோரி விழிப்புணர்வு.. ஜம்மு டு கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் !

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் தீபம் மௌரியா. கல்லூரி மாணவரான இவர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வவை ஏற்படுத்தும் வகையில், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பரப்புரையை மேற்கொண்டு உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் தனது பரப்புரை தொடங்கிய இவர், இதுவரை 13 மாநிலங்களில் சுமார் 4,500 கிலோமீட்டர் கடந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இந்த பரப்புரையின் போது 45 அதிகமான நகரங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

காஷ்மீரில் தொடங்கிய இவரது பயணம் கன்னியாகுமரியில் இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடைகிறது. கரூர் வந்த அவரை கரூர் ரவுண்ட் டேபிள் சங்கத்தினர் வரவேற்று உபசரித்து அழைப்பு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளது கல்லூரி மாணவர் தீபம் மௌரியா கூறுகையில், வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாலும், வடமாநில ஆண்கள், அங்குள்ள பெண்களை தங்களது உரிமைகளாக நினைத்து வயது வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெண்களுக்கு உரிய மரியாதையும், சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார்

Also Read: ”பேரு வெச்சீங்களே சோறு வெச்சீங்களா?” - எடப்படி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!