Tamilnadu

”திறந்திருக்கும் வீடுதான் என்னோட டார்கெட்” - தேனாம்பேட்டையில் கையும் களவுமாக சிக்கிய செல்போன் திருடன்!

வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரக்கூடிய இளைஞர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு குளிர்ச்சியான காற்று வந்ததால் வீட்டை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டில் பர்ஸில் வைக்கப்பட்டிருந்த 700 ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை இளைஞர் ஒருவர் எடுத்துக் கொண்டு செல்வது தெரிந்ததும் ஈஷாகித் என்ற இளைஞர் தனது நண்பர்களோடு சேர்ந்து திருடனை கையும் களவுமாக பிடித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் திருட வந்த நபர் தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சேர்ந்த விஷால் வயது 23 என்பது தெரிய வந்தது. இவர் வாட்டர் கேன் போடும் தொழில் செய்து வருவதாகவும் போதிய வருமானம் இல்லாததால் திறந்து வைத்துள்ள வீடுகளை குறிவைத்து செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.

இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் இதுப்போன்ற திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருக்க பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: குத்துச்சண்டை போட்டிக்கு சென்ற கல்லூரி மாணவி.. கடலில் மூழ்கி பலியான சோகம்!