Tamilnadu

அரசுவேலை ஆசைக்காட்டி ₹4.5 லட்சம் அபேஸ்: திருப்பத்தூரில் பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டவர் பிடிபட்டது எப்படி?

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவ்வாத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது கடந்த 2018-ம் ஆண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ராஜேஷ் என்பவர் பல்வேறு தவணைகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்த ராஜேஷிடம் இதுகுறித்து தேன்மொழி கேட்டுள்ளார்.

அப்போது, தாம் உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என பொய்க் கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து காவல்துறையில் தேன்மொழி புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கந்திலி காவல்துறையினர், ராஜேஷை கைது செய்துள்ளனர்.

ராஜேஷ், உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் இல்லை என்றும், எந்த அரசியல் கட்சியையும் சேராதவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேஷ், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: இப்படியா சத்தம்போட்டு கொண்டாடுவீங்க? - தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து; புதுவையில் போதை கும்பல் அராஜகம்