Tamilnadu
திடீரென விளைநிலத்தில் வந்திறங்கிய ஹெலிகாப்டர்; பரபரப்பான கடம்பூர் - சத்தியமங்கலம் அருகே நடந்தது என்ன?
பெங்களூருவில் இருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு பாரத்-ஷீலா என்ற தம்பதி மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ஹெலிகாப்டர் மூலம் சென்றுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜன.,08) காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை நெருங்கும் போது வானில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் என்ற கிராமத்தில் உள்ள விளை நிலையத்தில் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரையிறக்கியிருக்கிறார்கள்.
திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் அவ்விடத்தை நோக்கி கிராம மக்கள் படையெடுத்து வந்தால் அத்தியூர் விளைநிலப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் போலிஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கணவன் மனைவியான பாரத்-ஷீலா பயணித்த ஹெலிகாப்டரில் பொறியாளராஅ அங்கித் சிங் மற்றும் கேப்டன் ஜஸ்பால் இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாகவே ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிற்பகல் 2.15 மணியளவில் வானிலை சீரானதும் ஹெலிகாப்டர் கொச்சினை நோக்கி புறப்பட்டது. இதனிடையே கடம்பூரில் இருந்து தாழ்வாக பறந்து வந்து அத்தியூரில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவத்தை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!