Tamilnadu

“அனுமதியின்றி அரசு பள்ளி கட்டிடத்தை இடித்த அதிமுக கவுன்சிலர் கைது” : போலிஸ் அதிரடி - பின்னணி என்ன?

திருவள்ளூர் கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட வெண்மனம்புதுார் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியை சேதமடைந்து காணப்பட்டது. அத்தகைய கட்டிடத்தை இடிப்பதற்கு வட்டார வளர்ச்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டு இடிப்பதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது.

தீர்மானம் ஏற்றப்பட்டு இடிக்கவேண்டிய கட்டடத்திற்கு பதிலாக அருகிலிருந்த மாற்ற பள்ளி கட்டிடத்தை கடம்பத்தூர் இரண்டாவது வார்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் என்பவர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி இடித்து தள்ளியதால் அவர் மீது கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேஷை தேடி வந்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த அ.தி.மு.க கவுன்சிலர் சுரேஷை திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பிய நிலையில், திருப்பாச்சூர் பகுதிகள் அவரை சுற்றிவளைத்து திருவள்ளூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

Also Read: “பதவிக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே முதலிடத்தைப் பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி புகழாரம்!