Tamilnadu
’நான் தான் காளிமாதா’ - போலிஸ் ஸ்டேஷனில் உதார்விட்ட போலி சாமியார் பவித்ரா சிக்கியது எப்படி?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தவயோகி சாமியார் ஒருவர் கொடுத்த மோசடி புகாரில் பிரபல பெண் சாமியார் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி கிராமத்தில் தவயோகி ஞானதேவபாரதி என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த பவித்ரா (என்ற) காளிமாதா என்னும் பெண் சாமியார் ஆசிரமத்தோடு தன்னை தொடர்பில் இணைத்துக் கொண்டார். சாமியார்கள் இருவரும் தேடிவரும் மக்களுக்கு ஆசிர்வாதம் மற்றும் உதவிகள் வழங்கி வந்த நிலையில் ஞானபாரதிக்கும் பவித்ராவுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது.
ஆசிரம சொத்துக்களை அபகரிக்க பார்க்கிறார் என குற்றம் சாட்டினார் ஞானதேவபாரதி. தன்னிடம் பணத்தை பிடுங்கிக் கொண்டார் என குற்றம்சாட்டினார் பவித்ரா. இதனையடுத்து ஆசிரமத்தில் பல்வேறு சர்ச்சைகளும் அடிதடிகளும் நடைபெற்றன. இருவரும் மாறி மாறி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த வருடம் ஆசிரமத்தில் புலித்தோல் பதுக்கி வைத்திருப்பதாக பவித்ரா கொடுத்த புகாரில் வனத்துறையினர் ஆசிரமத்தில் சோதனையிட்டு அங்கிருந்த புலித்தோலை கைப்பற்றி ஞானதேவபாரதி மீது வழக்குப்பதிவு செய்து உதவியாளர் ஒருவரை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆசிரமத்தில் மேற்பார்வையாளராக இருக்கும் மற்றொரு பெண் சாமியாரான பவித்ரா ஆசிரமத்துக்குள் புகுந்து 30 பவுன் நகை, ஐந்து லட்ச ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
பவித்ரா தன்னை அகில இந்திய ஹிந்து யுவ மேர்ஷா தர்மாச்சார்யா அமைப்பை சேர்ந்தவர். எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு இருக்கிறது எனக் கூறி யாரும் தன்னை நெருங்கா வண்ணம் பார்த்துக் கொண்டார். மேலும் தமிழகம் முழுவதும் தான் காளிமாதா அவதாரம் என கூறி தமிழகத்தில் பிரபலங்கள் பலரும் தனது பக்தர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டார். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிக்கு சென்று அருள்வாக்கு கூட்டம் நடத்தி பிரபலமானார்.
இந்நிலையில் தொடர் புகார் எதிரொலி காரணமாக பெண் சாமியார் மீது இருந்த மோசடி வழக்கை கையில் எடுத்த போலிஸார் திண்டுக்கல்லில் இருந்த பவித்ராவை திடீரென கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட பவித்ரா விசாரணையின் போது போலிஸார் முன்னிலையில் தான் காளிமாதா, என்னை கைது செய்து தவறு செய்து விட்டீர்கள். காளி உங்களைத் தண்டிப்பாள் என ஆவேசமாக கூறி பிரார்த்தனை செய்தார்.
இதனை தொடர்ந்து பவித்ராவின் உடன் இருந்த அவரது தங்கை ரூபவதியும் கைது செய்யப்பட்டார். ஆண் சாமியார் கொடுத்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பவித்ரா நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நிலக்கோட்டையில் பிரபல பெண் சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?