Tamilnadu

“தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50% ஆஃபர்” : நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அசத்தும் கோவை பிரியாணி கடை!

கோவை சாய்பாபா காலனியில் 15 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற பிரியாணி கடை மாமு பிரியாணி கடை. இந்த கடை உரிமையாளர்கள் முந்தைய கோவிட் ஊரடங்கில் கோவையில் ஏழை எளியோருக்கு அருசுவை உணவளித்து தினமும் பல ஆயிரக்கணக்கானோருக்கு பசியினை போக்கினர். இந்த நிலையில், கோவிட் மூன்றாவது அலையினால் பொதுமக்கள் உயிர்காத்துக்கொள்வதற்கனா ஆயுதமான தடுப்பூசியினை போட்டுக் கொள்ளவேண்டிய அவசியம் ஆன ஒன்று ஆகி விட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஆனாலும், பலர் முதல் தவனை தடுப்பூசி பொதுமக்கள் போட்டுக்கொண்டாலும், இரண்டாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கின்றன. இதனால், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதனை ஊக்கப்படுத்த இந்த பிரியாணி கடை, பல்சமய நல்லுறவு இயக்கத்துடன் இணைந்து, இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உணவகங்களில் விற்கப்படுகின்ற பிரியாணி, சில்லி சிக்கன், குஸ்கா உள்ளிட்ட உணவுகளில் ஆஃப்ர் தரப்பட்டடிருக்கின்றன.

அதன்படி, 120 ரூபா பிரியாணி 60 ரூபாய்கும், 120 ரூபா பெப்பர் சிக்கன் 60 ரூபாய், 60 ரூபாய் லெக் பீஸ் 30 ரூபாயென பட்டியலிட்டிருக்கின்றன. பொதுமக்கள் தடுப்பூசி இட்டிக்கொள்ளவே இந்த ஆஃபர் தந்ததாக கடை உரிமையாளர் தெரிவிதிருக்கின்றார்.

கொரோனா தொற்றை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது. ஆனாலும், நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் பிரியாணி கடை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால், தற்போது பிரியாணி கடையில் கூட்டம் களை கட்டியுள்ளது. அவர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என செல்போன் மூலம் சான்றிதழை சரி பார்த்த பின்னரே அவர்களுக்கு ஆப்பர் பிரியாணி வழங்கப்படுகின்றது.

Also Read: “நகைகளே இல்லாமலும்.. போலி நகைகளை வைத்தும் முறைகேடு”: அதிமுக ஆட்சியின் மோசடியை அம்பலப்படுத்தும் ‘முரசொலி’!