Tamilnadu
பொங்கல் பரிசுத் தொகுப்பு.. 21 பொருட்கள் என்னென்ன?.. நியாய விலை கடையில் எப்படிப் பெறுவது?
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு 21 பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், 21 பொங்கல் பரிசுத் தொகுப்பை நாளை பொதுமக்களிடம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பரிசுத் தொகுப்பில் இருக்கும் 21 பொருட்கள் இவைதான்.
1. பச்சரிசி,
2 .வெல்லம்,
3 .முந்திரி,
4. திராட்சை,
5. ஏலக்காய்,
6. பாசிப்பருப்பு,
7. நெய்,
8 .மஞ்சள் தூள்,
9. மிளகாய்த் தூள்,
10.மல்லித்தூள்,
11.கடுகு,
12. சீரகம்,
13. மிளகு,
14.புளி,
15.கடலைப்பருப்பு,
16.உளுத்தம்பருப்பு,
17.ரவை,
18. கோதுமை மாவு,
19 உப்பு
ஆகிய பொருட்களும், இத்துடன் முழு கரும்பு மற்றும் துணி பை என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலை இந்த பரிசு பொருட்களை கொரோனா பரவல் இருக்கும் சமயத்தில் பொது மக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அதில் குறிப்பிட்ட நாளின்படி, அன்றைய நாளில் பொது மக்கள் பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில் பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் நேரடியாக பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளதால் கொரோனா பரவல் காரணமாக, அனைத்து நியாயவிலை கடைகளில், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நியாய விலை கடை மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படும் பள்ளிக்கூடங்களின் வளாகங்களில் கிருமிநாசினி, தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கட்டங்கள் வரையப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களின் வசதிக்காக ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும், எந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு என்றைய தினத்தில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது என்ற குறிப்பும், என்ன என்ன பொருட்கள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன என்ற குறிப்பும் ஒட்டப்பட்டுள்ளது.
அனைத்து நியாய விலை கடைகளும் நாளை தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்பினை, பொது மக்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது என உணவுத்துறை, மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?