Tamilnadu
டிக்கெட் கவுண்டரில் துப்பாக்கிமுனையில் ₹1.35 லட்சம் கொள்ளை: அதிகாலையில் துணிகரம் - போலிஸ் தீவிர விசாரணை!
சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இன்று காலை டிக்கெட் எடுப்பதற்காகக் கவுண்டர் மூடப்பட்டிருந்தைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், டிக்கெட் கவுண்டர் உள்ளே பயணிகள் சென்று பார்த்தபோது மீனா என்ற ஊழியரின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு, அவரை மீட்டு போலிஸாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் அந்த ஊழியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மூன்று பேர் டிக்கெட் எடுப்பதற்காக வந்தனர்.
அவர்கள் திடீரென துப்பாக்கியைக் காட்டி ஊழியரின் கை, கால்களைக் கட்டிப்போட்டுள்ளனர். பிறகு வசூல் செய்யப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து அந்த கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் குறித்தான அடையாளங்களைத் தேடி வருகின்றனர். ரயில் நிலையத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !