Tamilnadu

1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு- இல்லம் தேடி கல்வி தொடரும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி டிச.25-ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்த முதலமைச்சர், 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 10 வரை பள்ளிகள் செயல்படத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம்போல் நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர்களுக்கான இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடரும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Also Read: திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி... ஊரடங்கு கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள்..!