Tamilnadu
’வெற்றி நாயகனே தைரியம் கூறிவிட்டார்; இனி எனக்கு வெற்றிதான்’ - முதலமைச்சர் குறித்து வடிவேலு நெகிழ்ச்சி!
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வேலை நிமித்தமாக லண்டன் சென்ற நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. சென்னை திரும்பியதும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று தொற்று பாதிப்பு ஏதும் இல்லாமல் வடிவேலு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார் நடிகர் வடிவேலு.
அப்போது கொரோனா இருப்பது உறுதியானதும் முதல் ஆளாக ஃபோன் செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னை நலம் விசாரித்தது குறித்து உணர்ச்சிப்பொங்க கூறியுள்ளார்.
மேலும், ‘எப்படி இருக்கீங்க வடிவேல், காய்ச்சல் எதும் இருக்கா? எதும் பயப்படாதீங்க, தைரியமா இருங்க. மக்கள் நல்வாழ்வுத்துறையின் நேரடி பார்வையில் இருப்பீங்க. மக்களோட சொத்து நீங்க. அறிகுறி ஏதும் இருந்தா உடனே மருத்துவர்களிடம் சொல்லிடுங்க’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
Also Read: பெரிய சூறாவளியே பாத்துட்டேன்; என் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது - நடிகர் வடிவேலு சொன்ன குட்டி ஸ்டோரி!
கோடிக்கணக்கான மக்களுக்கான முதலமைச்சரே என்னை தொடர்பு கொண்டு பேசியது எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு எத்தனை ஆயிரம் முறை நன்றி கூறினாலும் போதாது. அவர் நீடூடி வாழ்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்து வாழ வைக்க வேண்டும் என நடிகர் வடிவேலு பேசியிருந்தார்.
முதலமைச்சரை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தன்னை அழைத்து நலம் விசாரித்ததாகவும் வடிவேலு கூறியிருக்கிறார். முதலமைச்சருக்கு ஏற்ற அருமையான போர்வாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இப்படி முதலமைச்சர், அமைச்சர் என எல்லாரும் தைரியம் கூற என்னுள் மேலும் தைரியம் கூடியது. இதற்கெல்லாம் காரணம் ரசிகர்களான மக்களின் அன்பும் பிரார்த்தனையும்தான். வெற்றி நாயகனே என்னை நலம் விசாரித்திருக்கிறார். இனிமேல் என் வாழ்க்கையில் வெற்றி, வெற்றி, வெற்றிதான். ஆயுள் உள்ளவரை உங்க எல்லாரையும் சிரிக்க வைப்பேன் என நடிகர் வடிவேலு மகிழ்ச்சி ததும்ப பேசியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?