Tamilnadu
“இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் சத்யராஜ் புகழாரம்!
கோவையில் ‘ஆற்றல்’ என்ற தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:-
இந்த எறும்போட சுறுசுறுப்பைப்பத்தி இன்னொரு எறும்புக்கு தெரிகிறது. அந்த எறும்புதான் நம்முடைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆகா! இந்த எறும்பை நாம் விட்டு விடக்கூடாது. இந்த எறும்பை அரவணைத்து நமக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டால் சமூகத்திற்கு நல்லது. சமூகத்திற்கும் - தொகுதிக்கும் - சாமான்ய மக்களுக்கும் - ஏழை எளிய மக்களுக்கும் இந்த எறும்பு நம்மோடு இருந்தால் நல்லதுனு அந்த எறும்பு நினைக்கிறது பாருங்கள்.
அதுதான் புத்திசாலித்தனம். கரெக்ட்டான ஆளுங்ககிட்ட, கரெக்ட்டான வேலையை ஒப்படைத்தால் எல்லாமே சரியாக நடக்கும்னு அதுல வந்து நம்ம முதலமைச்சர் தளபதி அவர்கள் சூப்பர். அதனால்தான் இன்னைக்கு பாருங்க. கரெக்ட்டான அமைச்சர்கள், கரெக்ட்டான அதிகாரிகள். இன்னைக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கு நடுவுல ஆட்சி சிறப்பாக நடக்குது.
கொரோனா நடுவுல பதவி ஏக்கிறாரு, கொரோனா உச்சத்தில இருக்குது. இதுக்கு நடுவுல வந்து எவ்வளவு சுறுசுறுப்பா, பம்பரமா இயங்குறாரு! அவரும் இயங்குறாரு! இவங்களும் இயங்குறாங்க; தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. செந்தில்பாலாஜி மாதிரி தம்பி இருந்தா எப்படி தளபதி மு.க.ஸ்டாலின் படைக்கு அஞ்சுவாரு!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தோற்றதே கிடையாது. அவர் எதை செய்தாலும் வெற்றி (சக்சஸ்) இப்படி ஒரு நல்ல அரசுக்கு இப்படி ஒரு நல்ல தளபதி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பல தளபதிகள், ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான தளபதிகள் உறுதுணையாக இருந்து தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உருவாகி கொண்டிருக்கிறது.
ஏனென்றால் நான் தெலுங்கு பட ஷூட்டிங் போகிறேன். மலையாள பட ஷூட்டிங் போகிறேன். தெலுங்குப்பட ஷூட்டிங்கிற்குப் போனால் அங்கு இருக்கிற ஹீரோக்கள் எல்லாம் அவர்களுக்கெல்லாம் நல்லா தமிழ் தெரியும். ஏன்னா எல்லாரும் நம்ம சென்னையில் படித்தவர்கள்தான். அவர்களெல்லாம் என்னை பார்த்து “என்ன சார் ஸ்டாலின் சார் பின்னுறாருன்னு கேக்கிறாங்க. அப்போ வந்து அங்க இருக்கிறவங்க பீல் பண்ணுறாங்க பாருங்க. அதுவே நமக்கு பெருமைதான். இந்த பெருமைகள் தொடர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!