Tamilnadu
வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த கும்பல்.. 2 பேரை கைது செய்த போலிஸ்: நடந்தது என்ன?
அரக்கோணம் அடுத்த அவினாசி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன். இவரது குடும்பம் கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் வசித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி நள்ளிரவு இரண்டு நபர்கள் துப்பாக்கியுடன் புஷ்கரன் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது மூதாட்டி உட்பட மூன்று பெண்கள் மட்டுமே தனியாக இருந்தனர். அவர்களை அந்த நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுடடுவிட்டு, வீட்டின் பீரோவிலிருந்த 25 சவரன் நகை, ரூ.60 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர் ஒருவரின் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி திருடுபோன வழக்குப் பதிவாகியிருந்தது.
இந்த இரண்டு வழக்கையும் விசாரித்தபோது ஒரே கும்பல்தான் கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சின்னார மற்றும் 17 வயது சிறுவனை போலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு பேரிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!