Tamilnadu

AICTE பெயரை பயன்படுத்தி இளைஞர்களுக்கு வலை.. ரூ.1.5 கோடி மோசடி - 8 பேரை கைது செய்த போலிஸ்!

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் பெயரைப் பயன்படுத்தி அரசு வேலைக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதாக மோசடி நடப்பதாக அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் பெயரைப் பயன்படுத்தி மோடி செய்தது உன்மை எனத் தெரியவந்தது.

இந்நிலையில், திருப்பத்தூரில், நேர்முகத் தேர்வு ஒன்று நடத்தப்படுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, போலியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவது உறுதியானது. மேலும் இந்த கும்பல்தான் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா, அருண்குமார், தர்மலிங்கம், தயாநிதி, ராஜேஷ், சக்கரவர்த்தி, பிரபு, யோகனாந்தனம் ஆகிய 8 பேர் கொண்ட கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அரசு வேலைக்கான நேர்முகத் தேர்வு நடத்துவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ. 1 கோடியே 50 லட்சம் வரை மோசடி செய்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “₹1 லட்சம் மதிப்புள்ள iPhone ஆர்டர் செய்தவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி” : தொடரும் மோசடி.. நடந்தது என்ன?