Tamilnadu
“பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தை பலி? - பெற்றோர் தலைமறைவு” : தீவிர விசாரணையில் போலிஸார் - பின்னணி என்ன?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கௌசல்யா - முத்துப்பாண்டி தம்பதி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 4 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிறந்த இந்த பெண் குழந்தை உடல்நல குறைவு காரணமாக 26ஆம் தேதி காலையில் உயிரிழந்தாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த கிராம செவிலியரிடம் முன்னுக்கு பின் முரணான பதில்களை பெற்றோர் தெரிவிக்கவே சந்தேகமடைந்த கிராம செவிலியர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ) தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து வி.ஏ.ஓ முணியாண்டி விசாரிக்கும் போதும் முறையான பதில் இல்லாததால், இந்த சம்பவம் தொடர்பாக சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முணியாண்டி புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிசார் முத்துப்பாண்டி - கௌசல்யா வீட்டிற்கு சென்ற போது பெற்றோர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது.
மேலும் பெற்றோர்கள் தலைமறைவாக இருப்பதால் பெண் சிசு கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் பெற்றோர்களை தேடி வருகின்றனர். உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் பெண்சிசு கொலை அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?