Tamilnadu
வீடு புகுந்த திருடனை காட்டிக் கொடுத்த சத்தம்.. போலிஸிடம் பிடித்துக் கொடுத்த மக்கள்: நடந்தது என்ன?
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் இவரது வீட்டின் மாடியில் உள்ள வீட்டில் கவியரசன், குமார் ஆகிய இரண்டு பேர் வாடகைக்குத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மர்ம நபர்கள் இரண்டு பேர் கோபிநாத்தின் வீட்டுக் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் கதவு திறக்க முடியாததால், பக்கத்து வீட்டில் உள்ள செல்வராஜ் வீட்டிற்குள் நுழைந்து ரூ.2 ஆயிரம் பணத்தை திருடியுள்ளர்.
பின்னர், கவியரசன் வீட்டிற்குள் நுழைந்து ரூ.1500 திருடியபோது வீட்டிலிருந்த டிவி கீழே விழுந்து உடைந்துள்ளது. இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த குமார் எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது, கவியரசன் வீட்டின் வெளியே இரண்டு நபர்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களைப் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து பிடிபட்ட ஒருவரை போலிஸாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் ஆந்திராவைச் சேர்ந்த அப்துல்மாலிக் என்று தெரியவந்தது. பின்னர் இவரை போலிஸார் கைது செய்து தப்பிச் சென்ற நபரைத் தேடிவருகின்றனர்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!