Tamilnadu

கடல் அழகை காண மாற்றுத்திறனாளிக்காக தனிப்பாதை அமைப்பு - சென்னை மாநகராட்சி அசத்தல் நடவடிக்கை!

சென்னை மெரினாவில் கடல் அழகை மாற்றுத்திறனாளிகள் பார்த்து மகிழ தனிப்பாதை அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரை மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை காணும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் சென்னை மெரினா முதல் கோவளம் கடற்கரை வரை மொத்தம் 8 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் தற்காலிக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 27ம் தேதி முதல் 2ம் தேதி வரை அனுமதிக்கப்படும் என்றும் 31ம் தேதி மற்றும் 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக காரணமாக அன்றைய தினம் அனுமதிக்கப்படாது ன கூறப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 27-ம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் இந்த பாதையில் செல்ல அனுமதிக்கப்படும் சென்னை மெரினா கடற்கரையில் ராணி மேரி கல்லூரிக்கு எதிரே இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.