Tamilnadu
"பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் பாடல்" : கொதித்த திருவள்ளூர் எஸ்.பி - அதிரடி ஆக்ஷனில் போலிஸார்!
பள்ளிச் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய நபர் குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவர் மீது போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
யூடியூபில் இளைஞர்கள் இருவர் கானா பாடலொன்றை பாடிய வீடியோ சமூக வலைதளத்தில் திடீரென வைரலானது. அதில், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிரான கருத்துகள் ஆபாசமாக இடம்பெற்றுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் ட்விட்டரில் குறிப்பிட்டு, அந்தப் பாடலை பாடியவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும், அவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படியும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் அறிவுறுத்தினார்.
அவர் குறிப்பிட்ட வீடியோ, டோனி ராக் எ போட்டி கானா என்ற பெயரில் 2020 மார்ச் மாதம் வெளியான வீடியோவாகும். அதில் சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள் பாடல் பாடுகின்றனர்.
சரவெடி சரண் என்பவர் பாடும் வரிகள்தான், பள்ளிச் சிறுமிகள் குறித்து மிக ஆபாசமாக உள்ளன. சென்னை பூக்கடை பகுதியில் வசிக்கும் சரவெடி சரண் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள பூக்கடை போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற போலிஸார், சரவெடி சரண் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாக உள்ள சரணை தேடி வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!