Tamilnadu
”எங்க டார்கெட்டே இதுதான்; வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையடித்து வந்த கில்லாடி தம்பதி” : விசாரணையில் பகீர்!
புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை, இலுப்பூர், பொன்னமரவாதி, மாத்தூர், மண்டையூர் ஆகிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக போலிஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போலிஸார் மாத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் நகார்கோவில் பகுதியைச் சேர்ந்த லதா, மதுரையைச் சேர்ந்த ராமு என்பது தெரிந்தது. மேலும் லதா ராமுவை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதி புதுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து யாரும் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 30 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்த போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !