Tamilnadu
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த கதி.. குற்றவாளியை தனி ஆளாகப் பிடித்த காவலர்!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் நந்தா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல் நந்தா வீட்டிலிருந்து வெளியேறி சுற்றித்திரிந்து வந்துள்ளார். அப்போது பள்ளிப்பாளையம் பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கற்களை வீசியுள்ளார்.
இதைப் பார்த்த பொதுமக்கள், கோகுல் நந்தாவைப் பிடித்தனர். அப்போது அவர் பொதுமக்களிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் காயமடைந்த முதியவரை மீட்டு சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பள்ளிப்பாளையம் காவல்நிலைய போலிஸ் சதீஸ்குமார் அப்பகுதிக்கு வந்து கோகுல்நந்தை பிடிக்க முயன்றார். ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்.
இதையடுத்து சதீஸ்குமார் தனிநபராக முயற்சி செய்து கோகுல் நந்தாவைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோகுல் நந்தாவை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மேலும் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!