Tamilnadu
“இந்த முறை புளிசோறா, பிரியாணியா?” : ரெய்டு நடக்கும் தங்கமணி வீட்டின் அருகே தொண்டர்களின் சுவாரஸ்ய பேச்சு!
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்துக் குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.
இந்நிலையில் இன்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாகச் சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி அளவிற்குச் சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது
மேலும் சென்னையில் ஈ.சி.ஆர் பனையூரில் உள்ள தங்கமணி இல்லத்திலும், செனாய் நகர், அரும்பாக்கம், கரையான்சாவடி உள்ளிட்ட இடங்களில் உள்ள அவரது அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள jaya sri plywoods, ஷெனாய் நகர் செல்லம்மாள் தெருவில் உள்ள m.v.complex-ல் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சோதனையைத் தொடர்ந்து, தங்கமணி வீட்டின் முன்பு அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் குவிந்தனர். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ஒன்றுகூடி இருப்பது தவறு என்றும், கலைந்து செல்லுமாறும் அ.தி.மு.கவினரிடம் போலிஸார் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து அங்கேயே குவிந்துள்ளனர். அவர்களுக்கு தங்கமணி தரப்பினர் காலை உணவு , டீ விநியோகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மதிய உணவிற்கு என்னவகையான உணவு கொடுப்பார்கள் என தொண்டர்களே தங்களுக்குள் பேசி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் மூலம் தெரியவந்தது.
முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட அ.தி.மு.க தொண்டர்களுக்கு உணவு, டீ விநியோகித்து பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து தற்போது அதேபாணியை தங்கமணியும் மேற்கொண்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் முணுமுணுக்கின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!