Tamilnadu

69 இடங்களில் ரெய்டு.. முறைகேடாக ரூ.4.85 கோடி சொத்துக்கள் குவிப்பு: சிக்கிய முன்னாள் அமைச்சர் தங்கமணி!

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர்கள் முறைகேடாகச் சொத்துக்களைக் குவித்துள்ளதாகப் புகார்கள் எழுந்தது. மேலும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து அ.தி.மு.க அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்திருந்தார்.

மேலும், சட்டமன்ற தேர்லுக்கான பிரச்சாரத்தின் போதும் அ.தி.மு.க அமைச்சர்களின் முறைகேடான சொத்துக்கள் குறித்து தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை நடத்தப்படும் என அப்போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து முறைகேடாகச் சொத்துக்களைச் சேர்த்தாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர். கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் இவர்களிடம் இருந்து முறைகேடாகச் சொத்து சேர்க்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.. அதேபோல் வழக்குப் பதிவு செய்து இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாகச் சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி அளவிற்குச் சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது

Also Read: தேங்காய் குடோனில் கொட்டிக் கிடந்த ஆவணங்கள் - M.R.விஜயபாஸ்கரை கையும் களவுமாக பிடித்த ரெய்டு பின்னணி?