Tamilnadu
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன் சந்திப்பு - பொருளாதார நிலை குறித்து ஆலோசனை!
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. இந்த போக்கை மாற்றி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதையை வகுத்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ‘முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கை, சமூக நீதி மற்றும் மனித வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் குறிப்பாக பெண்களுக்கான சம வாய்ப்பு, பின்தங்கிய மக்களின் நலன் தொடர்பான தங்களது பொதுவான பரிந்துரைகளை வழங்கும் என்றும், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மாநில உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்தும், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலையை உயர்த்துவது குறித்தும் ஆலோசனை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், கொரோனா பாதிப்பால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சி உள்ளிட்டவை குறித்து, இதுவரை 2 முறை இந்த குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்தும், பொருளாதார நிலையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும், நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவது, அதற்கான நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?