Tamilnadu
‘17 மாநிலத்துலயும் எப்படி ஆட்சிக்கு வந்தீங்கன்னு மறந்துடுச்சா அண்ணாமலை’ - வெளுத்தெடுத்த தயாநிதி மாறன்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் 18 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டி இன்று தொடங்கியது. இதனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உடன் இருந்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசியதாவது, ”கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜக அரசு எதிர்த்து அல்லது முதல்வரை விமர்சித்தாலும் சிறைச்சாலைதான். பாஜக ஆட்சி நடத்த கூடிய அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இவற்றை எதிர்த்து அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பாஜகவினர் முதலில் பதில் சொல்லட்டும். 17 மாநிலங்களில் எவ்வாறு அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்? சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியும் வருவாய் துறையினரை வைத்து மிரட்டியும் சிபிஐ வைத்து மிரட்டியும்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். பாஜக குதிரை பேரம் நடத்தி கொல்லைப்புறமாக வந்துதான் ஆட்சியை பிடிக்கின்றார்கள்.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை மிரட்டி அவர்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடித்தார்கள். இதேபோல் கர்நாடகாவிலும் ஆட்சியை கலைத்துதான் இவர்கள் ஆட்சியை பிடித்தார்கள். இதைத்தான் அவர்கள் ஆளும் 17 மாநிலங்களிலும் செய்து வருகின்றார்கள். முதலில் அவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும். பாஜகவினர் குறை கூறுவதை மட்டுமே ஒரு தொழிலாக வைத்துள்ளார்கள்.” என கடுமையாக சாடினார்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!