Tamilnadu

“சென்னையில் 65% மக்கள் முகக் கவசம் அணியாமல் சுற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது ” : ராதாகிருஷ்ணன் பேட்டி !

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற 14வது கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், "திருவள்ளூர் மாவட்டத்தில் 81.4% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 47.3% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 18 வயது பூர்த்தி அடைந்த 5.78 கோடி மக்கள் தொகையில் 4.07 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் 2-வது தவணை தடுப்பூசி 2.83 கோடி பேர் செலுத்தியிருக்கின்றனர். 1.08 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர்.

ஒமைக்ரான் நோய் பல்வேறு நாடுகளில் பரவியிருந்தாலும் தமிழகத்தில் இது வரை பரவவில்லை. பொது இடங்களில் சமூகப் பாதுகாப்பை கடைப்பிடிக்க வேண்டும், , தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.

சென்னையில் 65% பேர் முகக்கவசம் அணிவதில்லை.புதியவகை ஒமிக்ரான் நோய் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். அதேபோல் வதந்திகளையும் பொதுமக்கள் வேண்டாம். கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு அரசு விடுத்த விதிமுறைகளைப் பின்பற்றாததால் இதுவரை 101 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒருநாளில் மாற்றம் - நேற்று உத்தரவு.. இன்று முதல்வர் விழாவில் கணீர் குரலில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!