Tamilnadu

தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு வீர வணக்கம்.. கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்திய உதகை மக்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் முப்படைத் தளபதி பிபின் ராவுத் அவரது மனைவி உட்பட 14 ராணுவ வீரர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதி , தீப்பிடித்து எரிந்ததில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.

அவர்களின் உடலுக்கு நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட ராணுவ அதிகாரிகள் அவர் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு நடத்தி ஆங்காங்கே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே தமிழ்நாடு அரசு சார்பில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் தலைமையில் இரண்டாவது நாளாக அப்பகுதி மக்களிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.