Tamilnadu

“மக்கள் உங்களுடன் நிற்கிறார்கள்” : உயிரிழந்த இராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல் கடிதம் !

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் முப்படைத் தளபதி பிபின் ராவுத் அவரது மனைவி உட்பட 14 ராணுவ வீரர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதி , தீப்பிடித்து எரிந்ததில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக நேற்றைய தினம் அவர்களின் உடலுக்கு நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட ராணுவ அதிகாரிகள் அவர் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள் என உயிரிழந்த இராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தனித்தனியாக முதலமைச்சர் இன்று தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து எழுதிய கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

“கடந்த 8-12-2021 அன்று நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் 12 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து இந்திய மக்களுடன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மீட்புப் பணிகளிலும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்து தந்திருந்தது.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தனித்தனியாக முதலமைச்சர் அவர்கள் இன்று தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து எழுதிய கடிதத்தில், இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள் என்றும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டுவர பலத்தையும், தைரியத்தையும் நீங்கள் பெறவேண்டும் என தான் விழைவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Also Read: “ஆசிரியர் தலையில் குப்பை பக்கெட்டை கவிழ்த்து மாணவர்கள் அட்டகாசம்” : கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் !