Tamilnadu
அலட்சியத்தால் குழந்தை பலி.. மருத்துவமனை செல்லாமல் தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் : கோவையில் அதிர்ச்சி!
கோவை மாவட்டம், செட்டி வீதி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி புண்ணியவதி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், புண்ணியவதி நான்காவது முறையாகக் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் இவர் மனவருத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது, புண்ணியவதி தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இவர் தொப்புள் கொடியைச் சரியாக அறுக்காததால், தாயும் சேயும் மயங்கிய நிலையிலிருந்துள்ளனர்.
பிறகு வீட்டிற்கு வந்த உறவினர்கள் இருவரும் மயங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், உரிய முறையில் பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும் எப்படி பிரசவம் நடந்தது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் மருத்துவமனை வந்த, போலிஸார் வழக்குப் பதிவு செய்து புண்ணியவதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்குத்தானே பெண் ஒருவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு