Tamilnadu
“சொத்துக்காக தாயை பட்டினி போட்ட கொடூர மகன்” : மூதாட்டியின் குறையை கேட்டு அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்!
ராணிப்பேட்டை வரகூர் பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீலா. மூதாட்டியான இவர் மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி சுசீலா தரையில் அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மூதாட்டி அமர்ந்திருப்பதைப் பார்த்து அவரிடம், ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மூதாட்டி சுசீலா, “தனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சொத்துக்களை எழுதிக் கொடுக்கும் படி கேட்டு கொடுமைப்படுத்தி வருகிறார். மேலும் உணவு கொடுக்காமல் பட்டினி கிடக்க வைக்கிறார். தனது இளையமகனின் உணவு எடுத்துக் கொண்டு வந்தாலும் அவனையும் மிரட்டி அனுப்பிவிடுகிறார்.
எனவே, உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வரும் தனது மகன் மீது உரிய நடவடிக்கையும், சொத்துக்களை பாதுக்காக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என கூறினார். இதையடுத்து ஆட்சியர் உங்கள் மகனிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என கூறி, நிம்மதியாக வீட்டிற்குச் செல்லுங்கள் என வழி அனுப்பிவைத்தார்.
தரையில் அமர்ந்து மூதாட்டியின் குறைகளை ஆட்சியர் கேட்டது அங்கிருந்த மக்கள் மத்தியில் விழப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆட்சியரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!