Tamilnadu
“கப்பல்ல கொண்டு வர ரொம்ப செலவாகும்.. ஆப்பிரிக்க இளைஞரின் வலையில் சிக்கிய ராணுவவீரர்” : தேனி போலிஸ் அதிரடி
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் அதிர்ஷ்ட ராஜா (37). இராணுவத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இவர் சொந்தமாக எண்ணெய் ஆலை மற்றும் பாமாயில் விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார்.
இவருக்கு பாமாயிலில் தனக்கென்று சொந்த பிரான்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று இணையதளத்தில் விளம்பரங்களை பதிவேற்றம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ஷ்ட ராஜாவின் மின்னஞ்சலுக்கு விலைப்புள்ளி ஒன்று வந்துள்ளது.
அதில் 5 மெட்ரிக் டன் அளவிற்கு ஒப்பந்தம் தயார் செய்து அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அதிர்ஷ்ட ராஜா முதற்கட்டமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் கொரோனா காலம் என்பதால் கப்பல் மூலமாகவே எண்ணெய் அனுப்பப்படும். குறைந்தது 50 மெட்ரிக் டன் அளவு ஆர்டர் செய்ய வேண்டும் என மெயில் வந்துள்ளது.
Also Read: பரப்பன அக்ரஹார சிறையில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை; அதிரடி ரெய்டு நடத்திய க்ரைம் போலிஸார்!
இதனைக் கண்ட அதிர்ஷ்ட ராஜா 75 மெட்ரிக் டன் எண்ணெய் ஆர்டர் செய்து 7 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். அடுத்தபடியாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும். நிறுவன மேலாளர் மாறியதால் கூடுதல் பணம் வேண்டும் என படிப்படியாக மொத்தம் 60 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதங்களில் அனுப்பி உள்ளார் அதிர்ஷ்ட ராஜா. அதற்கு அடுத்தபடியாக எந்த ஒரு இமெயிலும் வரவில்லை. எண்ணெய்யும் வரவில்லை.
இதன் காரணமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த சைபர் கிரைம் போலிஸாரிடம் அதிர்ஷ்ட ராஜா கடந்த மாதம் புகார் அளித்தார். அதிர்ஷ்ட ராஜாவின் இ மெயிலுக்கு வந்த தகவலைக் கொண்டு விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஐவோரினீ நாட்டைச் சேர்ந்த அதுர் ஸைவிஸ்டர் கோவுமே என்ற இளைஞரை தேனி சைபர் க்ரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?