Tamilnadu

நரிக்குறவ இளைஞர்களிடம் பணம் பறித்த கும்பல்.. துரத்திப் பிடித்த எஸ்.பி: நடந்தது என்ன?

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதனன்று நரிக்குறவ இளைஞர்கள் சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இரண்டு பேர் பச்சை குத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். இவர்களும் அங்கு பச்சைகுத்திக் கொண்டனர்.

இதையடுத்து அந்த மூன்று இளைஞர்களும் பச்சை குத்தியதற்குப் பணம் கொடுக்காமல் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்து நரிக்குறவ இளைஞர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பிரித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தின் தப்பிச் சென்றனர்.

அப்போது, காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அவ்வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த அவர் உடனே தனது காரில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற குற்றவாளிகளை விரட்டினார்.

பின்னர், செல்வகுமார் அவரைகளை மடக்கிப் பிடித்தார். இதையடுத்து அவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். பிறகு செல்வகுமார் எஸ்.பி காரில் இருந்து இறங்கி அவர்களை துரத்திச் சென்று பிடித்தார்.

இதையடுத்து சிக்கிய மூன்று பேரிடமும் போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் சரவன் பேட்டையைச் சேர்ந்த கிஷோர், பாலாஜி என்பது தெரியவந்தது. மேலும் மற்றொருவர் 17 வயதான சிறுவன் என்பதும் தெரிந்தது.

பிறகு போலிஸார் சதிஷ் மற்றும், பாலாஜியைக் கைது செய்தனர். சிறுவனை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன், பணம் மற்றும் கத்தியைப் பறிமுதல் செய்தனர்.

Also Read: "பென்சில் திருடிட்டான் சார் - ஜெயில்ல போடுங்க இவன": போலிஸாரை அலறவிட்ட சிறுவன் - நடந்தது என்ன?