Tamilnadu
₹20 லட்சம் கொடுத்தா அரசு வேலை; ஸ்கெட்ச் போட்டு 60 பேரிடம் மோசடி; வசமாக சிக்கிய கில்லாடி குடும்பம்!
அரசு துறை, மின்சார வாரியம் மற்றும் இதர துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 60 பேரிடம் 4 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று மோசடி செய்த கணவன் மனைவி கைது. அவர்களிடம் இருந்து 1 மடிகணினி, 10 செல்போன்கள், 1 டேப்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காந்தா, வெங்கடேசன் என்பவரின் மகனுக்கு Airports Immigration Officer வேலை வாங்கி தருவதாக கூறி 20,00,000 ரூபாயை கடந்த 2019 ஆம் வருடம் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கணவன் மனைவியான சசிபிரியா, ரவிசந்திர பாபு, மகள் அஷதா ஆகியோர் சேர்ந்த பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது 15.11.2021 ந்தேதி ஏமாற்றிய நபர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புகாருக்கு ஆளானவர்கள் சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் Mass Manpower Consultancy என்ற பெயரில் அலுவலகம் ஆரம்பித்து கடந்த 2017ல் இருந்து இன்று வரை சுமார் 60 பேருக்கு மேல் கல்வித்துறையில் ஆசிரியர் பணி, NLCயில் காண்டிராக்டர், இன்ஜினியர் வேலை, சுகாதாரத்துறையில் Nurse, Courth OA, JA, Airports Immigration வேலை, மின்சார துறையில் OA, JE, AE வேலையும், அறநிலையத் துறையில் வேலை மற்றும் பல அரசு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாகச் சொல்லி மொத்தம் பணம் ரூபாய் 4 கோடிக்கு மேல் பெற்றுள்ளனர்.
மேலும் திருவாரூரைச் சேர்ந்த இரண்டு பேருக்கு NLC யில் பொறியாளர் வேலைக்கு தலா ருபாய் 16 லட்சம் வதம் 32 லட்சம் பணம் வாங்கியும், சோளிங்கரை சேர்ந்த 7 பேரிடம் நீதிமன்ற வேலைக்கு 40 லட்சம் வரை பணம் வாங்கி வேலை வாங்கி கொடுக்காமல் விசாரணையில் தெரிய வந்தது.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மேற்குறிப்பிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 25ந்தேதி காவல் ஆய்வாளர் கலாராணி மற்றும் காவலர்கள் சகிதமாக சுங்கசத்திரத்தை சேர்ந்த R. சசிபிரியா, ரவிசந்திரபிரபு ஆகிய இருவரையும் வடபழனியில் கைது செய்து அவர்களிடமிருந்து போலி அரசு கடிதங்கள், போலியான பணி நியமன ஆணைகள், 1 லேப்டாப், 10 செலபோனகள் மற்றும் 1 டேப்லட பறிமுதல் செய்யப்பட்டது.
பொதுமக்கள் யாரும், இதுபோன்ற போலியாக ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வழங்கும் திட்டம் கிடையாது.
வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாக பண பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும், வேலைக்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க கூடிய வேலைக்கான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறப்பான முறையில் புலனாய்வு செய்து எதிரிகளை கைது செய்த காவல் ஆய்வாளர் திருமதி. கலாராணி மற்றும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!