Tamilnadu

“எனக்கு வாழத் தகுதியில்ல.. மன்னிச்சிடுங்க”: ஆன்லைன் ரம்மியால் ரூ.5 லட்சம் இழந்த இளைஞர் விபரீத முடிவு!

திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு ராஜமாமா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சுரேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் ரம்வி விளையாடி வந்துள்ளார். இதில் சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இதனால் சில நாட்களாக சுரேஷ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், அவரது வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்பாக சுரேஷ் எழுதிய கடிதம் ஒன்றை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்துவிட்டேன். எனக்கு வாழத் தகுதியில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என எழுதியிருந்ததாக போலிஸார் கூறியுள்ளனர்.

Also Read: “நிலம் வாங்கனும்.. பணம் வாங்கிட்டு வா”: குடும்பமே சேர்ந்து வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை:கணவன் கைது!