Tamilnadu
ரயில் தண்டவாள மின் கம்பியில் மாட்டிக்கொண்ட பட்டம்... எடுக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவன் அப்துல் காசிம். இவர் கடந்த 21ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து வ.உ.சி நகர் ரயில்வே யார்டில் பட்டம் விட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது பட்டம் ஒன்றின் நூல் அறுந்து, தண்டவாளத்தின் மேலே செல்லும் மின்சாரக் கம்பியில் சிக்கிக் கொண்டுள்ளது. இதை எடுப்பதற்காக அப்துல் காசிம் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரயில் மீது ஏறி பட்டத்தை எடுக்க முயன்றார்.
அப்போது, சிறுவனின் கை மின்சாரக் கம்பியில் பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த சக சிறுவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் உடனே சிறுவன் அப்துல் காசிமை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அப்துல் காசிம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!