Tamilnadu

வங்கக் கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி... 25ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு அடுத்தடுத்து உருவாகி வருவதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.