Tamilnadu

100 சவரன் கோயில் நகைகளை கையாடல் செய்த பா.ஜ.க நிர்வாகி.. 6 பேர் தலைமறைவு - வலைவீசி தேடும் போலிஸார்!

தூத்துக்குடி மாவட்டம், வீரமாணிக்கம் கிராமத்தில் பத்ரகாளியம்மன், சந்தி அம்மன், சுடலை மாடன் ஆகிய மூன்று கோயில்கள் உள்ள. இந்த கோவில்களை பா.ஜ.க பிரமுகர் பட்டு ராமசுந்தரம் என்பர் நிர்வாகம் செய்து வந்தார்.

இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூன்று கோயில்களும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. அப்போது முதலே கோயில் நகைகளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்களும், அறநிலையத்துறை அதிகாரிகளும் கோரிவந்தனர்.

ஆனால், பா.ஜ.க பிரமுகர் பட்டு ராமசுந்தரம் நகைகளை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை தக்கார், காந்திமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை செய்தனர். இதில் 100 சவரன் நகைகள் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் பட்டு ராமசுந்தரம் அவரது சகோதரர்கள் கார்த்திகேயன், முத்து மற்றும் உறவினர்கள் முருகேசன், திருமால், கதிரேசபாண்டியன் ஆகிய ஆறு பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை அறிந்த ஆறு பேரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

மேலும் முன் ஜாமின் கோரி பட்டு ராமசுந்தரம் தரப்பில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இரண்டு முறை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கிராம மக்கள் ஆட்சேபனை மனுத்தாக்கல் செய்தனர். இதனால் அவரது முன்ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: திருந்தக்கூடியவரா மோடி? வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட என்ன காரணம்? இனி என்ன நடக்கும்?