Tamilnadu
”சென்னைய தத்தளிக்க வெச்ச உங்களுக்குலாம் பேசவே தகுதியில்லை” - EPS வகையறாக்களை சாடிய மூத்த பத்திரிகையாளர்!
சென்னை மழை வெள்ளம் பற்றி எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பேட்டியை சற்று முன்பாகத்தான் பார்த்தேன். பார்த்தவுடனேயே பத்திக்கிட்டு வந்தாலும்... அடுத்த விநாடியே ச்சீ ச்சீ இவர்களெல்லாம் ஒருஆளு தேளுன்னு அந்த பேட்டிய வேற பார்த்து, அதுக்கு ஒரு ரியாக்ட் வேற பண்ணினோமேன்னுதான் என் மேலயே எனக்கு கொஞ்சம் அசூயை வந்தது..!
இப்ப முதல்வர் கனவுல இருக்குற அனைவருக்கும் சரி, இதுக்கு முன்னாடி முதல்வர்களா இருந்த பலருக்கும் சரி... அந்த அதிகாரமிக்க பதவிக்கு வர்றதுக்கான காரணம் ஒண்ணு இருந்திருக்கும். சிலருக்கு அதிகாரம், சிலருக்குப் புகழ், சிலருக்குப் பணம், சிலருக்கு தற்பெருமை, சிலருக்கு முகஸ்துதி, சிலருக்கு எவரையும் அடக்கி ஆளும் வெறி, சிலருக்கு 100 தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் மண் ஆசை அல்லது பொன்னாசை அல்லது பெண் ஆசை, சிலருக்கோ உல்லாச வாழ்வை அனுபவிக்கும் வேட்கை, சிலருக்கு தன் பதவி பணத்தைக் கொண்டு தன்னைச் சுற்றி ஒரு பெரும் கூட்டத்தை கட்டியாளும் ஆசை...
ஆனா இதெல்லாம் எதுவுமே இல்லாம... ஒரு ஆட்சின்னா எப்படி இருக்கணும்?!... ஒரு ஆட்சியாளன்னா எப்படி இருக்கணும்?!... ஒரு கவர்னன்ஸ்னா அதாவது ஒரு நிர்வாகம்ன்னா எப்படி இருக்கணும்?!.... ஒரு தலைவன்னா... ஒரு மன்னன்னா எப்படி இருக்கணும்?!... இதை எல்லாம் இந்த உலகிற்கு... இந்தியாவுக்கு... குறிப்பா தமிழ்நாட்டுக்கு காமிக்கணும்ன்னே தமிழ்நாடு முதல்வர் தலைவர் தளபதியார் ஒருமு டிவோடுதான் வந்திருப்பதாகவே நான் நீண்ட காலமாக எழுதியும் வருகிறேன்... இப்பொழுது அதை முழுமையாக நம்பவும் செய்கிறேன்..!
அவருக்கு எல்லாம் அறிவுரையோ, ஆலோசனையோ சொல்லுகின்ற தகுதி, நான்கரை ஆண்டு காலம் தமிழ்நாட்டிற்கு ஏழரையைக் கூட்டி வந்த கேடுகெட்ட ஆட்சியை அளித்த எடப்பாடிக்கு கிடையவே கிடையாது. இரண்டு நாட்களாக, மழையோடும், மக்களோடும் அவர் ஒரு நாளைக்குப் பத்து மணி நேரத்திற்கும் மேலாக புழங்கி வருகின்றார். சென்னையை ஊடுருவி கடலில் கலக்கும் இரு ஏரிகளின் திறப்பையும், மிகத் தெளிவாக திட்டமிட்டு, தனது நேரடி கண்காணிப்பிலேயே திறக்க வைத்து, மக்களுக்கு எந்த சேதாரமும் இன்றி அந்த வெள்ளம் கடந்து செல்ல முன்களப் பணியாளர்களில் முதன்மைப் பணியாளராக அவரே நிற்கின்றார்...!
பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உடை இன்னபிற வசதிகள் உடனுக்குடன் கிடைக்கின்றன. எங்கே தண்ணீர் தேங்கினாலும் இரண்டு மணி நேரத்தில் அது வெளியேற்றப்படுகிறது. அடுத்தடுத்த மழைக்கும் தயாராக அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த அரசும், ஆட்சியாளர்களும் சாலைகளில் நின்று செயல்படுகின்றனர். அவருக்கு வெறும் புகழ் மட்டுமே தேவையெனில், அம்மா உணவகம் அழிந்து போயிருக்கும், அல்லது குறைந்த பட்சம் அதன் பெயராவது மாற்றப்பட்டிருக்கும். புத்தகப் பைகளில் இதோ வியாக்கியானம் பேசும் எடப்பாடியின் உருவம் விட்டு வைக்கப்பட்டிருக்காது..! இந்த மழைநீர் தேக்கத்தை நீக்குவதில் நேர்மையான எக்ஸ்பர்ட் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் முதல்வரால் இங்கே பெரு முயற்சியில் கொண்டு வரப்பட்டுவிட்டார்.
அடுத்த ஆண்டு மழைக்குள்ளாக சென்னையின் வடிகாலை உலகத் தரத்திற்கு நிச்சயம் முதல்வர் மாற்றி கட்டமைத்திருப்பார்..! 900 கோடிக்கு சென்னை வடிகால் சரி செய்ய திட்டம் போட்டு நிதி ஒதுக்கி, இன்று சென்னையை தத்தளிக்க வைத்த எடப்பாடி வகையறாக்கள் வெளியே வந்து பேசுவதற்கே அருகதை அற்றவர்கள்..! தான் சென்னை மேயராக இருந்த பொழுது ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவான தொகையில் மிக விரைவாக 9 மேம்பாலங்களைக் கட்டி சென்னை போக்குவரத்தை சீர் செய்தவர்... சாதாரண சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றிக் காட்டியவர்.... மெட்ரோ ரயிலை சென்னைக்குக் கொண்டு வந்தவர்... மெரினா கடற்கரையை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர்.... சென்னையின் வடிகாலையும் சரி செய்வார்.... அடுத்த பருவ மழைக்கு சென்னை மக்களை உல்லாசமாக வலம் வரவைப்பார்..!
அவருக்குப் பணம் தேவையில்லை, புகழ் தேவையில்லை, முகஸ்துதிகள் தேவை இல்லை, கட்சிக்காரர்களுக்காக கண்டும் காணாமல் செல்ல வேண்டிய தேவையும் இல்லை.... இன்னும் சொல்லப் போனால், அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற வாக்கரசியலுக்காகக் கூட எந்த சமரசமும் செய்து கொள்ளும் மன நிலையில் கூட இல்லை.... தன்னுடைய ஆட்சிக் காலத்தில், மிக நல்ல, நேர்மையான, திறமையான நிர்வாகத்தைக் கொடுத்து மக்களைப் பாதுகாத்தோம், அவர்கள் எதிர்காலத்திற்கு நல்லவை செய்தோம் என்ற தன்னுடைய மனதின் சான்றிதழ் ஒன்றே போதும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்..!
அதன் பொருட்டே, கொட்டும் மழையில் ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்று கொண்டு உழைத்து வருகின்றார். அவரது தன்னலமற்ற உழைப்பிற்கே, அந்த இயற்கை அவருக்கும், அவர் விரும்பும் மக்களுக்கும் நல்லது செய்யும்..! மிக்க நன்றிகள் முதல்வர் அவர்களே..! உங்க உடம்பையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க...!
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!