Tamilnadu

புயலாக மாறுகிறதா காற்றழுத்த தாழ்வுப்பகுதி? சென்னை, டெல்டா உட்பட 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11ஆம் தேதி காலை வடதமிழக கடற்பகுதிகளை நெருங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ,புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்னர் வலுவிழந்து வளி மண்டல மேலடுக்கு சுழற்சியாக புது‌ச்சே‌ரி‌-கடலூர் இடையே தமிழகத்தை கடந்து செல்லும் என்றும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.