Tamilnadu
மேயர்..எதிர்க்கட்சி தலைவர்.. முதல்வர்: களத்தில் முன்வரிசையில் நிற்கும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் பாராட்டு!
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை மானிலை ஆய்வு மையத் தெரிவித்திருந்தது.
இதையடுத்து நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கடும் வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அதேபோல், மேயராகவும், எதிர்கட்சித் தலைவராக இருந்தபோதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு நிவாணப் பொருட்கள் வழங்கிய புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !