Tamilnadu

“கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி” : தமிழ்நாடு அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் என்ன?

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு உட்பட்டு பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில் நகைகடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி , ஒரு குடும்பத்தினர் 31.03.21 வரை 5 பவனுக்கு உட்பட்டு நங்க நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றதில் ஒரு சில கடன் தாரர்கள் தங்களது கடன் தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, நிலுவையில் இருந்த தொகை ரூ.1,114.64 கோடி என்றும் அதற்கு பிறகு 1.04.21 முதல் 30.09.21 வரை பொது நகைக் கடன்களை பகுதியாகவோ அல்லது முழுவதுமாக திரும்பச் செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர் அசல், வட்டி , அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்டு நிலுவையாக ரூ.6000 கோடி உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, முதலமைச்சர் அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தில் 31.03.21 வரை 5 பவுனுக்கு உட்பட்டு பொது நகைக்கடன் பெற்று அதில் சில கடன் தாரர்கள் நாளது தேதிவரை தங்களது நிலுவை தொகையினை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும், தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னரும் இந்த அரசானை பிறப்பிக்கப்படும் நாள்வரை நிலுவையில் உள்ள ரூ.6,000 கோடி நகைக் கடன்களை தள்ளுபடி செய்து அரசு ஆணை இடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் 1.04.21ஆம் நாள் முதல் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை அதற்குரிய வட்டியினை அரசு ஏற்றுக்கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடி தொகையினைஅரசு வழங்கும்

Also Read: ஓடும் ரயிலில் 17 பேருக்கு கத்திகுத்து.. பயணிகளை அலறவிட்ட நிஜ ‘ஜோக்கர்’ : ஜப்பானில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!