Tamilnadu
பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? - தயார் நிலையில் தீயணைப்புத் துறை!
தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்தும், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்தும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ‘பாதுகாப்பான தீபாவளி’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்,
இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுசுகாதாரத்துறை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
பட்டாசுகளை திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.
பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது.
குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும்.
வெற்றுக்கைகளால் பட்டாசு கொளுத்தக்கூடாது.
பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.
மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை எறியக்கூடாது.
சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது.
பட்டாசு விபத்துகள் அதிகம் நிகழும் என்பதால் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி தீபாவளி கொண்டாட பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தமிழ்நாடு தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா கூறியதாவது, “தீ விபத்து குறித்து அழைப்பு வந்த 20 விநாடிகளுக்குள் வீரர்கள் அனைவரும் வண்டியில் அமர்ந்து தயாராகிவிட வேண்டும். 2 நிமிடத்தில் நிலையத்தில் இருந்து வண்டிபுறப்பட வேண்டும். ஒரு நிமிடத்துக்கு ஒரு கிலோ மீட்டர் என்ற வேகத்தில் செல்ல வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் நெருக்கடி மிகுந்த இடங்களில் இது சாத்தியமில்லை. இருந்தாலும் முடிந்தவரை விரைவாக சென்று விடுவோம். தமிழகம் முழுவதும் 352 நிலையங்களில் 7 ஆயிரத்து 800 வீரர்கள் தீயணைக்கும் பணிக்குதயார் நிலையில் இருப்பார்கள்.
சென்னையில் 42 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு விபத்து ஏற்படும் பகுதிகள் என 19 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ஒரு தீயணைப்பு வண்டி எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். நீர் நிரப்பப்பட்ட 50 டேங்கர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன.
ராக்கெட் பட்டாசுகளால்தான் அதிகமான தீ விபத்துகள் நடக்கின்றன. இந்த வகை பட்டாசுகளை திறந்தவெளி மைதானங்களில் மட்டுமே வெடிக்க வைக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் ‘101’ மற்றும் ‘102’ எண்களுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!