Tamilnadu
எப்படி பட்டாசு வெடிக்க வேண்டும்? விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை என்ன? - மீட்பு பணியினர் விழிப்புணர்வு
பேருந்து மற்றும் ரயில் பயணிகளிடம் ஏன் பட்டாசை எடுத்துச் செல்லக்கூடாது. பள்ளி கல்லூரி மாணவர்களிடம் பட்டாசை எப்படி வெடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
தீப ஒளி என்றாலே குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் பட்டாசு என்பது மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. பட்டாசு இல்லாமல் தீப ஒளி இல்லை. தீப ஒளி என்றாலே பட்டாசுதான் முக்கியத்துவம் பெரும். அப்படிப்பட்ட பட்டாசினால் ஏற்படக்கூடிய விபத்துக்கள், பட்டாசை எப்படி கையாள வேண்டும், பட்டாசை ரயில் மற்றும் பேருந்துகளில் ஏன் எடுத்துச் செல்லக்கூடாது, என தமிழகம் முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீவிர விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதுகாப்பான தீப ஒளியை கொண்டாட சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அசோக் நகரில் உள்ள பள்ளிகளில் தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து பேருந்து பயணிகள் மற்றும் மாணவ மாணவிகளிடம் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பட்டாசு எப்படி பயன்படுத்த வேண்டும், எதில் எடுத்துச் செல்லக்கூடாது என்பது குறித்து தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் தெரிவித்துள்ளனர்.
பட்டாசுகளை பேருந்திலோ ரயிலிலோ எடுத்துச் செல்லக்கூடாது. அப்படி எடுத்துச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிவு 164 சட்டப்பிரிவு இப்படி ரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
அரசு வழி காட்டும் நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
மாசு ஏற்படக்கூடிய பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
குடிசை இல்லாத திறந்தவெளி பகுதியில் வெடிக்கச் செய்ய வேண்டும். பட்டாசு கொளுத்தும் போது இறுக்கமான பருத்தி ஆடைகளை அணிந்து இருக்கக் வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளியில் நீர் நிரப்பி அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். ராக்கெட் போன்ற பட்டாசு வெடித்தால் தீ விபத்து ஏற்படும். எனவே அதை உணர்ந்து பாதுகாப்பான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
புஸ்வானம் கொளுத்துகிற போது சமமான தரையில் வைத்து, பக்கவாட்டில் நின்று கொண்டு கொளுத்த வேண்டும். நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசுகளில் வெடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
தீ விபத்து ஏற்பட்டால் ஓடக்கூடாது உடனே தண்ணீர் ஊற்றி அனையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள். பாட்டில் டப்பா போன்றவற்றை பயன்படுத்தி பட்டாசு வெடிக்க செய்யக்கூடாது.
பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெறவேண்டும். உரிமம் இல்லாமல் விற்பனை செய்ய கூடாது. அப்படி செய்தால் 100 என்ற காவல்துறை எண் மூலம், தீயணைப்பு மீட்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கலாம்.
தீப்புண் மீது தண்ணீர் ஊற்றுங்கள். இங்க் மற்றும் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாமல் மருத்துவரிடம் செல்ல அறிவுறுத்தி பாதுகாப்பான தீப ஒளியை கொண்டாட தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டால் 101, 04428554313 / 16 / 17 அல்லது 04428591901 என்ற தொலைபேசி எண்ணிலும், 7540095101 என்ற செல்போன் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
இப்படிப்பட்ட பாதுகாப்பான தீப ஒளியை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையும், காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!